புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31 ஆம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை என துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.
ஒன்றாம் வகுப்புமுதல் 8ஆம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிவரை 5 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.