டிரெண்டிங்

ஹெச்.ராஜா மனநல வைத்தியம் பார்ப்பது நல்லது - புதுச்சேரி முதலமைச்சர்

ஹெச்.ராஜா மனநல வைத்தியம் பார்ப்பது நல்லது - புதுச்சேரி முதலமைச்சர்

webteam

தரம் தாழ்ந்து பேசி வரும் ஹெச்.ராஜா மனநல வைத்தியம் பார்ப்பது நல்லது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வெளியிட்டிருந்த ட்வீட் பதிவுகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூட வருத்தம் தெரிவித்திருந்திருந்தார். 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள நாராயணசாமி, “மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், நாட்டில் தற்போது பணத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். மக்களின் பிரச்னைகள் பற்றி சிந்திக்காத பிரதமர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசி வரும் ஹெச்.ராஜா மனநல வைத்தியம் பார்ப்பது நல்லது. பாஜக நிர்வாகிகளும் ஹெச்.ராஜாவை மனநல மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைத்தியம் செய்ய வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது. ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று விமர்சித்தார்.