டிரெண்டிங்

எவ்வித பிரஷரும் இல்லாமல் பரப்புரை: மாஃபா பாண்டியராஜன்

எவ்வித பிரஷரும் இல்லாமல் பரப்புரை: மாஃபா பாண்டியராஜன்

webteam

எவ்வித பிரஷரும் இல்லாமல் அமைதியாக தேர்தல் பணியாற்றி வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகருக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவர் , கொருக்குபேட்டை, மீனாம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வைத்தியலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, பிரஷர் கொடுப்பதற்காகத் தான், தனக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக டிடிவி.தினகரன் கூறியது குறித்த கேள்விக்கு அமைச்சர் பாண்டியராஜன் பதிலளித்தார். யார் வெடிக்கப் போகிறார்கள் என்று இரண்டு வாரங்களில் தெரியும் என கூறினார்.