டிரெண்டிங்

தனியார் பள்ளிகளை இழுத்து மூட வேண்டும்: கொதிக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

தனியார் பள்ளிகளை இழுத்து மூட வேண்டும்: கொதிக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

webteam

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால் தனியார் பள்ளிகளை மூட வேண்டிய நிலை வரும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். 

சென்னையில் நடந்த ராமசாமி படையாட்சி பிறந்தநாள் விழாவைக் கலந்து கொண்டு அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை வைத்து அரசியல் கட்சிகள் பாஜகவைத் தனிமைப்படுத்த முயற்சிப்பதாக சாடினார். 

நீட் தேர்வால் தாழ்த்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட  மாணவர்கள் பயனடைந்துள்ளதாக கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 318 பேர் மட்டுமே மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளால், தமிழக அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்துள்ளது என்றும் உடனே தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும், இல்லையேல் தனியார் பள்ளிகளை மூட வேண்டும் என்றும் கடுமையாகத் தெரிவித்தார்.