விருத்தாசலம் கிளைச் சிறையில் கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு. நீதிபதியிடம் உறவினர்கள் புகார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவரை திருட்டு வழக்கு தொடர்பாக அண்மையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு 2ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டுள்ளது. விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து பின்னர் சிறைக்கு திரும்பினார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் செல்வமுருகனுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
பிணவறைக்குச் சென்று செல்வமுருகனின் உடலைப் பார்த்த அவரது மனைவி பிரேமா, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார். காவல்துறையினர் அடித்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இறந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்திய விருதாச்சலம் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்திடம் முறையிட்டுள்ளார்.