டிரெண்டிங்

டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம்

டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம்

webteam

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். இவர்களுடன் சுயேட்சையாக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். 

ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடும் செய்யும் பணியும் நடைபெற்றுள்ளது. இதில் டிடிவி தினகரன் கோரியிருந்த தொப்பி சின்னம் ரமேஷ் என்ற வேட்பாளருக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தினகரன் கோரிய மற்ற சின்னங்களும் வழங்கப்படாத நிலையில், இறுதியாக பிரஷர் குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.