டிரெண்டிங்

அதிகாரிகளை விட குறைவான சம்பளம் வாங்கும் குடியரசு தலைவர்

rajakannan

அரசு பதவிகளில் உள்ள அதிகாரிகளை விட குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் குறைவான சம்பளம் வாங்குகிறார்கள்.

இந்தியாவில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் குடியரசு தலைவர். நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படுபவர். முப்படை தளபதிகளுக்கு அவரே தலைவர். இருந்தாலும் கேபினட் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை விட குடியரசு தலைவர் குறைவான சம்பளமே வாங்குகிறார். இது எப்படி சாத்தியம் ஆகும் என கேள்வி இயல்பாக எழுகிறது.

சம்பள விவரம்(மாத சம்பளம்):

குடியரசு தலைவர் சம்பளம்: ரூ.1.50 லட்சம்
துணை குடியரசு தலைவர்: ரூ.1.25 லட்சம்
மாநில ஆளுநர்: ரூ.1.10 லட்சம்

7-வது ஊதியக் குழுவிற்கு பிறகு உயர் அதிகாரிகள் சம்பளம்:

கேபினட் செயலாளர்: ரூ.2.5 லட்சம்
மத்திய அரசின் செயலாளர்: ரூ.2.25 லட்சம்

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான உள்துறை அமைச்சகம் தயார் செய்த பரிந்துரை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை நீண்ட நாட்களாக கையெழுத்தாகாமல் நிலுவையில் உள்ளது. இந்த பரிந்துரை கையெழுத்தாகி அமலுக்கு வந்தால் குடியரசு தலைவரின் சம்பவம் ரூ.5 லட்சமாக உயர வாய்ப்புள்ளது. அதேபோல் துணை குடியரசு தலைவரின் சம்பவம் ரூ.3.5 லட்சம், ஆளுநர் ரூ.3 லட்சமாக உயரும். 2008-ம் ஆண்டு வரை குடியரசு தலைவரின் சம்பளம் ரூ.50 ஆயிரமாகதான் இருந்தது. அதேபோல் துணை குடியரசு தலைவர் ரூ.40 ஆயிரம், ஆளுநர் ரூ.36 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார்கள்.