டிரெண்டிங்

சுகாதாரம், கல்வியில் கேரளா நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது: குடியரசு தலைவர் பாராட்டு

சுகாதாரம், கல்வியில் கேரளா நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது: குடியரசு தலைவர் பாராட்டு

rajakannan

கேரளாவில் பொது சுகாதார அமைப்பு மிகவும் சிறப்பாக செயல்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக கேரளாவில் பயணம் மேற்கொண்ட ராம்நாத் கோவிந்த் திருவனதபுரத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளில் பேசிய ராம்நாத் கல்வி, சுகாதார துறைகளில் நாட்டின் இதர மாநிலங்களுக்கு கேரளா முன்னுதாரணமாக திகழ்வதாக கூறினார். அதேபோல், கேரளாவில் கழிவுநீர் பாராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக பாராட்டினார்.

கேரளத்தில் உள்ள பொது சுகாதார அமைப்பை உத்தரபிரதேச பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்த அடுத்த நாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். அதேபோல், கேரளாவில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதாகவும், ஜிகாத் பயங்கரவாதம் வளர்வதாக பாஜக குற்றம்சாட்டி வந்த நிலையில் ராம்நாத் கோவிந்த் கேரள அரசை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநில சட்டசபையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திப்பு சுல்தானை ராம்நாத் கோவிந்த் பாராட்டி பேசியிருந்தார்.