டிரெண்டிங்

ரயில் விமானங்களில் கூட தமிழில் பறிமாற்றம் இருக்க வேண்டும் - பிரேமலதா

ரயில் விமானங்களில் கூட தமிழில் பறிமாற்றம் இருக்க வேண்டும் - பிரேமலதா

webteam

ரயில் மற்றும் விமானங்களில் தமிழில் பறிமாற்றங்கள் இருக்க வேண்டும் என தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என  தெற்கு ரயில்வே உத்தரவிட்டிருந்தது. மொழிப் பிரச்னையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் என தென்னக ரயில்வே ஆணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து இந்த ஆணை, புதிய சர்ச்சையை கிளப்பியது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி, வைகோ உட்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து தனது சுற்றறிக்கையில் தென்னக ரயில்வே மாற்றம் செய்தது. அதன்படி குழப்பம் ஏற்படாத வகையில் புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே புதிய உத்தரவை பிறப்பித்தது.

இதனிடையே செய்தியாளை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, “தென்னக ரயில்வே இன்று வெளியிட்ட தமிழ் பரிமாற்றம் இல்லாத அறிவிப்பானது பயணிகளை சிரமத்தில் ஆழ்த்தும். விமானத்தில் கூட இந்தியில் தான் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. எனவே ரயில், விமானங்களில் தமிழில் பரிமாற்றங்கள் இருத்தல் வேண்டும். ‘அன்னை மொழி காப்போம், அனைத்து மொழி கற்போம்’ என கேப்டன் கூறிய வழியில் தமிழ் தான் தாய் மொழி. ஆனால் மற்ற மொழியை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நதி நீர் இணைப்பு ஒன்றுதான் தீர்வு. இதை பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவேன். 
வரக்கூடிய தேர்தல்களில் எங்களது கூட்டணி வெற்றிபெறும். மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் ஜாதிய பிரச்சனைகள் இருக்கதான் உள்ளன. இது சம்பந்தமாக ஆட்சியாளர்களிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்” எனத் தெரிவித்தார்.