டிரெண்டிங்

மதுரை: கொரோனாவுக்கு கர்ப்பிணி உயிரிழப்பு

மதுரை: கொரோனாவுக்கு கர்ப்பிணி உயிரிழப்பு

Rasus

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மதுரையில் உயிரிழந்தார். அவரின் இரட்டை குழந்தைகளை மருத்துவர்கள் ஆரோக்கியத்துடன் மீட்டனர்.

மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45 வயது நிரம்பிய கர்ப்பிணி பெண் பேறுகாலத்தின் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருப்பினும் அவரின் இரட்டை குழந்தைகளை ஆரோக்கியத்துடன் மருத்துவர்கள் மீட்டனர்.

மதுரையில் முதன்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளது மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.