அரசியலுக்கு தான் வந்தது ஒரு மிகப் பெரிய விபத்து என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. அதில் பேசிய மன்மோகன் சிங், பிரதமர் பதவிக்கு தன்னை விட பிரணாப் முகர்ஜி தான் பொருத்தமானவராக இருந்தார் என்று தெரிவித்தார். ஆனாலும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படாததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தன்னுடன் சுமூகமாக பிரணாப் முகர்ஜி பழகினார் என்றும் குறிப்பிட்டார்.