7 ஐஐடி, 7 ஐஐஎம்எஸ், 100 கேந்திரிய வித்யாலயா மற்றும் 100 நவோதயா பள்ளிகள் நாடுமுழுவதும் விரைவில் திறக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரகாஷ் ஜவடேகர், கிராமப்புற மாணவர்களுக்காக நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். இருப்பினும் தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் இல்லாதாது துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்தார். அத்துடன் பல்வேறு மொபைல் ஆப்-கள் மற்றும் இணையதளங்கள் மூலம் பிரதமர் மோடி புதிய இந்தியாவை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், 7 ஐஐடி, 7 ஐஐஎம்எஸ், 100 கேந்திரிய வித்யாலயா மற்றும் 100 நவோதயா பள்ளிகள் நாடு முழுவதும் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.