சென்னையில் அரசு மற்றும் அரசு சார்ந்த கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் தேர்தல் தொடர்பான சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், விளம்பர பதாகைகள், கொடிகள், தோரணங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க கூடாது என மாநகர ஆணையரும், தேர்தல் அலுவருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மீறி அமைக்கப்பட்டால் அவை உடனடியாக அகற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரகாஷ் எச்சரித்துள்ளார். தனியார் இடங்களில் விளம்பரம் செய்ய வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்று அமைத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.