டிரெண்டிங்

பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. அதிமுகவுக்கு
ஒற்றைத் தலைமையா இரட்டைத் தலைமையா என்ற விவதாதத்துக்கு இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட
வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் இருக்கும் ராயப்பேட்டை அவ்வை
சண்முகம் சாலையில் இன்று ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில் "அதிமுகவின் கழக பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள் மாண்புமிக எடப்படியாரே இதுவே
அனைத்து தொண்டர்களின் எதிர்பார்ப்பு" என்று கொளத்தூர் கே.ஆறுமுகம் போஸ்டர் ஒட்டியுள்ளார். இவர் அதிமுகவின் 65
ஆவது வட்ட உறுப்பினராக இருக்கிறார். மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் முதல்முறையாக அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள்‌ கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும், இரட்டைத் தலைமையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் முதல்முறையாக அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச்
செயலாளர்கள்‌ கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும், இரட்டைத்
தலைமையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.