டிரெண்டிங்

“அதிகாரிகள் டார்ச்சரால்தான் இந்த முடிவு” - தபால்காரர் தூக்கிட்டு தற்கொலை

webteam

சீர்காழி அருகே செம்பதனிருப்பு போஸ்ட் மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே அல்லி விளாகம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவர் செம்பதனிருப்பு தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த கடிதத்தில் “அஞ்சல் இடமாற்றம் செய்வது தொடர்பான அலுவலக பணத்தை நான் எடுத்ததாக பிரச்னை ஏற்பட்டது. அந்த பிரச்னையில் உயர் அதிகாரிகள் எனக்கு அதிக நெருக்கடி கொடுத்தனர். அதனால் மிகவும் மன உளைச்சலில் உள்ளேன். இதனால்தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் அறிந்த சீனிவாசன் மனைவி சுதா (35) பாகசாலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார், தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இறந்து போன சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.