"என் கணவர், ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். அவரை நம்பியே குடும்பம் இருந்த நிலையில், அவர் தவறிவிட்டார், குடும்பத்தில் நால்வர் உள்ளனர், யாருக்கும் வேலையில்லை. தற்போதைக்கு மளிகைப்பொருட்கள் தேவை" – லட்சுமிபதி, சென்னை
"கணவர் கட்டடத்தொழிலாளி. வருமானமில்லை. அத்தியாவசிய, மளிகைப்பொருட்கள், குடும்பதிலுள்ள 4 பேருக்கு தேவைப்படுகிறது" – செல்வி, திருநெல்வேலி
"நான் சலூன்கடை வைத்திருந்தேன். ஊரடங்கு நேரத்தில் வேலையில்லை, வீட்டில், பெரியவர் முதல் சிறியவர் வரை 7 பேர் இருக்கின்றனர். அனைவருக்கும், அன்றாட வாழ்வில்லி அத்தியாவசிய பொருட்கள் தேவை" – வெற்றிக்குமார், புதுக்கோட்டை
"நான் பெயிண்டர். என்னுடன் வயதான அம்மா மட்டும் இருக்கிறார். தொழிலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தேவை" - ஶ்ரீநிவாசன், வடசென்னை
"வயது முதர்ந்தவரான நான், தனியாக வசிக்கிறேன். எனக்கு, மளிகை மற்றும் மாற்று உடைகள் தேவைப்படுகிறது" – லட்சுமி, சென்னை
"கம்பி வேலை செய்து வந்த எனக்கு, தற்போது வேலையில்லை. எனக்கு இரு சிறு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு, பால் வாங்கவே பணமில்லை. ஏதாவது, வேலை கிடைத்தால், அதன் மூலம் குடும்பத்தை உயர்த்த முடியும்" – செந்தில்நாதன், திருவள்ளூர்
- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.
உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'