டிரெண்டிங்

ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டும்: பொன்னார்

ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டும்: பொன்னார்

webteam

தமிழகத்தில் பால் கலப்பட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்றால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கன்னியாகுமரியின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலில் ரசாயனக் கலப்பட விவகாரத்தில்  துணிந்து நடவடிக்கை எடுக்காமல் ராஜேந்திர பாலாஜி காலம் தாழ்த்துகிறார். நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் பதவி விலக வேண்டும். பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 50 ஆண்டுகால‌ ஆட்சியில் கலப்படம் மலிந்து விட்டது என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாலில் ரசாயன கலப்பட்ம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரமில்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.