டிரெண்டிங்

கூட்டணிக்கு பின்னரே முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு - பொன்.ராதாகிருஷ்ணன்

கூட்டணிக்கு பின்னரே முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு - பொன்.ராதாகிருஷ்ணன்

JustinDurai

தேர்தல் நேரத்தில்தான் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை உறுதியளிக்க முடியுமா என்ற கேள்விக்கு பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில்,

‘’அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என தற்போது சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன். தேர்தல் நேரத்தில்தான் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும்.

எனினும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யாரென்று நிலவிய குழப்பத்திற்கு சமூகமான முடிவு எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.