டிரெண்டிங்

ஆட்சியைப் பிடிக்க முயற்சி: திமுக மீது பொன். ராதாகிருஷ்ணன் புகார்

ஆட்சியைப் பிடிக்க முயற்சி: திமுக மீது பொன். ராதாகிருஷ்ணன் புகார்

webteam

அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி, புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்கும் யுக்தியை திமுக தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். 
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவுக்குள் நடைபெறுவது அந்த கட்சியின் பிரச்னை என்றும், அதில் பிறர் தலையிட வேண்டியதில்லை என்றும் கூறினார். மேலும், தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளில் இருந்தும் பாரதிய ஜனதாவில் சேர நிர்வாகிகள் விரும்புவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.