கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு அமைச்சர்கள் சாக்குபோக்கு கூறி தடுப்பதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் சரக்கு பெட்டக மாற்று முனைய வர்த்தக துறைமுகம் அமைவதன் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்த சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டால் கொக்கு முட்டையிடும் இடம் எனக்கூறி தமிழக அமைச்சர்கள் தடுப்பதாக கூறினார்.
கடல் வழி போக்குவரத்திற்கு திட்டம் வகுத்தால் மீன்பிடி வலைகள் நாசமாகும் என தமிழக அமைச்சர்கள் கூறுவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.