டிரெண்டிங்

பள்ளிவாசல் அருகே ‌வரிசையில் நின்று வாக்குசேகரித்த அரசியல் கட்சியினர்

பள்ளிவாசல் அருகே ‌வரிசையில் நின்று வாக்குசேகரித்த அரசியல் கட்சியினர்

webteam

தஞ்சை ஆற்றங்கரை ஜும்மா பள்ளி வாசல் முன், அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்கள் வரிசையில் நின்று வாக்கு‌ சேகரித்தனர். 

மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இரண்டாம் கட்டத் தேர்தல்கள் 18ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழகம், கர்நாடகாவின் 14 தொகுதிகள் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், தஞ்சை ஆற்றங்கரை ஜும்‌மா பள்ளி வாசல் அருகே, அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்கள் வரிசையில் நின்று வாக்கு‌ சேகரித்தனர். தஞ்சை‌ தொகுதியின் அதிமுக வேட்பாளர் காந்தி, திமுக‌ வேட்பாளர் நீலமேகம், அமமுக வேட்பாளர் ரங்‌சாமி ஒருவர் பி‌ன் ஒருவராக அணிவகுத்து நின்று வாக்கு சேகரித்தனர். தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்‌‌களை சந்தித்த‌ அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.