கான்க்ரீட் சாலைகள் அமைக்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் விரும்புவதில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
நாடெங்கும் உள்ள சாலைகள் கான்க்ரீட் சாலைகளாக மாற்றப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அவ்வாறு காங்க்ரீட் சாலைகள் அமைக்கப்பட்டால் அவை 200 ஆண்டுகளாவது பழுதில்லாமல் பயன்பாட்டில் இருக்கும் என அவர் தெரிவித்தார். மும்பையில் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கான்க்ரீட் சாலைகள் இன்னமும் நன்றாக இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் ஆனால் அது போன்ற சாலைகளை அமைக்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் விரும்புவதில்லை என்றும் தெரிவித்தார்.