டிரெண்டிங்

வெடி பொருட்களை செயலிழக்கச் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காவலர் படுகாயம்

வெடி பொருட்களை செயலிழக்கச் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காவலர் படுகாயம்

kaleelrahman

உத்திரமேரூர் அருகே வெடிபொருட்களை செயலிழக்கச் செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் காவலர் படுகாயம் அடைந்தார். 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் சட்ட விரோதமாக வெடி தாயாரிப்பு மூலப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக காதர் மொய்தீன் என்பவரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த வெடி தயாரிப்பு மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்கள் தயாரிக்கும் மூலப் பொருட்களை செயலிழக்கச் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து வெடி பொருட்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர், வெடி பொருட்களை செயலிழக்க வைக்க எடமச்சி வெடிமருந்து குடோனிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கொண்டு சென்று அங்கு வெடி பொருட்கள் அனைத்தையும் தொலைவில் இருந்து வெடிக்கச் செய்தனர். 

அப்போது அங்கிருந்த காவலர்கள் வெடி வெடித்துவிட்டதாக நினைத்து அருகில் சென்று மீதமுள்ள வெடி பொருட்களை தீயிட்டு எரிக்க முற்பட்டனர். அப்போது ஒருவெடி திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்தது. இதில் அருகில் இருந்த காவலர் பாலமுருகனின் வலதுகால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள போலீசார் பாலமுருகனை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.