டிரெண்டிங்

எம்.பி.கனிமொழி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

எம்.பி.கனிமொழி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

jagadeesh

திமுக எம்.பி கனிமொழி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை, காவல்துறை வாபஸ் பெற்றுள்ளது.

சென்னை சிஐடி காலனியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. வீட்டிற்கு தினமும் ஒரு ஏட்டு தலைமையில் 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை டிஜிபியிடம் கடந்த 23-ஆம் தேதி கனிமொழி புகார் மனு அளித்தார்.

இந்நிலையில், சிஐடி காலனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை இரவோடு இரவாக திரும்ப பெற்றுள்ளனர். கனிமொழிக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லாததாலும், கொரோனா காலத்தில் காவல்துறையின் தேவை அதிகரித்துள்ளதாலும் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் தற்போது வரை போலீஸ் பாதுகாப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது