நாளை நடைபெற இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபருக்கும் 16 வயது சிறுமிக்கு நாளை காலை கோயிலில் திருமணம் நடப்பதாக இருந்தது. இதுகுறித்து கடலூர் மாவட்ட சைல்டு ஹெல்ப் லைன் உதவி மைய தொலைபேசியிக்கு எண்ணுக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட சமூக நலத்துறை மற்றும் பெண்ணாடம் காவல்துறையினர் சிறார் மீட்புக்குழு நாளை நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி பெற்றோரிடம் விசாரணை செய்து அவர்களை எச்சரித்து விசாரணைக்காக கடலூர் மாவட்ட சிறார் உதவி மையத்துக்கு வர வேண்டும் என வலியுறுத்தி சென்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடலூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,