திருப்பத்தூரில் அண்மையில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியில் நாளை குழந்தைத் திருமணம் நடைபெறவுள்ளதாக ஆலங்காயம் வட்டார சமூகநலத்துறை அதிகாரி வைஜெயந்திக்கு தகவல் கிடைத்தது. வாணியம்பாடி கிராமிய போலீசாருடன் மேல்குப்பம் பகுதிக்குச் சென்று விசாரணை செய்தபோது, கமலக்கண்ணன் ஜெயராணி அவருடைய மகன் வடிவேலு என்கிற அருள் என்பவருக்கும் அதேபகுதியை 12ஆம் வகுப்பு படித்து அண்மையில் தேர்ச்சி பெற்ற சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து, மாணவிக்கு இன்னும் திருமண வயது பூர்த்தி ஆகாததால் திருமணம் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கினர். அத்துடன் திருமணத்தையும் தடுத்து நிறுத்தினர். பின்னர் இரு வீட்டாரும் திருமணம் செய்து வைக்கமாட்டோம் என உறுதியளித்தனர்.