அண்டைவீட்டாரை போல சிசிடிவி எனும் கண்காணிப்பு கேமிராவுக்கு அஞ்சாதவர்களே இருக்க முடியாத அளவுக்கு பெரும் பங்கு வகித்து வருகிறது.
அதுவும் இருட்டாக இருக்கும் இடத்தில் கூட துல்லியமாக நடப்பவற்றை கண்காணிக்கும் வகையிலான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி வசதியும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்படி இருக்கையில், போலந்து நாட்டில் உள்ள ஒரு ராணுவ அருங்காட்சியகத்தில் காதல் ஜோடிகள் பலரும் தனிமையில் சந்தித்து அளவளாவி கொள்வது தொடர்கதையாகி வருவதை அறிந்த மியூசியத்தின் நிர்வாகத்தினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ளது.
அதன்படி Ford Gerhard மிலிட்டரி மியூசியத்திற்குள் புதிய அமைப்பிலான சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், இங்கு வரும் பார்வையாளர்கள் அருங்காட்சியக வளாகத்தில் உடலுறவு கொள்வதை நிறுத்தும்படியும் தெரிவித்துள்ளது.
“பழமையான அருங்காட்சியகமாக இருக்கும் இங்கு, இருட்டாக இருப்பதால் மூளை முடுக்குகளில் காதல் ஜோடிகள் உறவு கொள்வது முன்பு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் பதிவிடப்பட்டிருக்கிறது.
அவற்றை அகற்றி புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவியை பொருத்தி, பழைய சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது பலரும் அருங்காட்சியகத்தில் தனிமையில் இருந்தது தெரிய வந்திருக்கிறது. ஆகவே இனி எந்த ஜோடிகளும் இவ்வாறு இருக்கக் கூடாது.
எங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள கண்காட்சிக்கு வைக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை. முற்றிலும் மாறுபட்ட தார்மீக நெறிமுறைகளுக்குப் பழகியவை. பழமைவாத, மரபுவழி மற்றும் அருவருப்பானவையும் கூட. ஆகவே அவற்றை அசௌகரியத்திற்கு ஆளாக்க வேண்டாம்.
பல குணாதிசயங்களை கொண்ட பழமைவாதிகளும் அருங்காட்சியத்துக்கு அடிக்கடி வருவதுண்டு. அந்த நேரத்தில் காதல் ஜோடிகள் இச்சையில் நடந்துக்கொள்வதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைவதை நாங்கள் விரும்பவில்லை” என கடலோர பாதுகாப்பு அருங்காட்சியகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.