மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லம் ஆக்கக் கூடாது என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்க ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என்றார். புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த அவர், பாரம்பரிய வீட்டை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்?’ என்றும் கேள்வி எழுப்பினார்.