டிரெண்டிங்

துண்டுபிரசுரம் இல்லாததால் மாம்பழத்தை கொடுத்து வாக்கு கேட்ட பாமக வேட்பாளர்

துண்டுபிரசுரம் இல்லாததால் மாம்பழத்தை கொடுத்து வாக்கு கேட்ட பாமக வேட்பாளர்

kaleelrahman

பூந்தமல்லி பாமக வேட்பாளர் துண்டு பிரசுரம் இல்லாததால் மாம்பழத்தை கொடுத்து வாக்கு சேகரித்தார்.

பூந்தமல்லி தனி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ராஜமன்னார் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று பூந்தமல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மசூதிகளில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது துண்டுபிரசுரம் கையில் இல்லாததால் வேட்பாளரின் சின்னமான மாம்பழத்தை கையில் வைத்துக் கொண்டு தொழுகை முடித்து விட்டு சென்ற இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரிடமும் மாம்பழத்தை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இரண்டு மசூதிகளில் தொழுகை முடித்துவிட்டு வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் மதிய உணவுக்கு தாமதமானது. இதனால் வாக்கு சேகரிக்க வந்த தொண்டர் ஒருவர் பசி தாங்க முடியாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய சின்னமான மாம்பழத்தை மர நிழலில் நின்று ரசித்து ருசித்து சாப்பிட்டார்.

பாமக சார்பில் வேட்பாளர் திடீரென்று அறிவிக்கப்பட்டதால் இதுவரை துண்டுபிரசுரங்கள் ஏதும் அச்சடிக்கவில்லை என உடனிருந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.