டிரெண்டிங்

மீண்டும் ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு புதின் வாழ்த்து

மீண்டும் ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு புதின் வாழ்த்து

rajakannan

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது புதின் இதனை தெரிவித்துள்ளார். இந்தத் தொலைபேசி உரையாடலின் போது இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்தும், சர்வதேச பிரச்னைகள் குறித்தும் இருவரும் பேசியுள்ளனர். பயங்கரவாதத்தின் இணைந்து செயல்பட வேண்டும் என இருவரும் வலியுறுத்தினர். 

இந்த உரையாடலின் போது, விலதிவோஸ்டாக்கில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள கிழக்கத்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு, புதின் அழைப்புவிடுத்தார். இருவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.