டிரெண்டிங்

மார்ச் 6-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!

மார்ச் 6-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!

Rasus

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வரவுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக மார்ச் 6-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அத்துடன் சென்னையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசவுள்ளதாகவும் தமிழிசை தெரிவித்தார். மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும் நிலையில் மார்ச் 6-ஆம் தேதி சென்னை வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சமீபத்தில் இரண்டு முறை பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். மதுரைக்கு வந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து திருப்பூர் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து டிஎம்ஸ்- வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.