டிரெண்டிங்

“தமிழக மக்கள் மீது மோடி அன்பு வைத்திருக்கிறார்” - ரவிசங்கர் பிரசாத்

“தமிழக மக்கள் மீது மோடி அன்பு வைத்திருக்கிறார்” - ரவிசங்கர் பிரசாத்

rajakannan

மிகப்பெரிய எழுச்சியுடன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜகவின் தேசியத் தலைவர்கள் பலரும் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழகத்திற்கு இரண்டு முறை வருகை தந்தார். மீண்டும் மார்ச் முதல் வாரத்தில் அவர் கன்னியாகுமரிக்கு வரவுள்ளார். அதேபோல், பாஜக தலைவர் அமித்ஷா இன்று ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். 

இந்நிலையில், வேலூர் மற்றும் மதுரையில் நடைபெற இருக்கும் பாஜக பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக விமானம் மூலம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மோடி அரசின் செயல்பாட்டால் இந்தியா பாதுகாப்புடன் இருப்பதாகவும், தமிழக மக்கள் மீது அவர் மிகுந்த அன்பு வைத்திருப்பதை காண முடிவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாடாளுமன்றத் தேர்தலில் மிகுந்த எழுச்சியுடன் பிரதமர் மோடி தமிழகத்திலும் வெற்றி பெற்று மீண்டும் நாட்டின் பிரதமர் ஆவார். மோடி அரசின் செயல்பாட்டால் இந்திய நாடே பாதுகாப்பாக உள்ளது. தமிழக மக்களிடம் மோடி காட்டும் அன்பு மற்றும் ஆதரவைக் காண முடிகிறது” என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.