டிரெண்டிங்

பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழகம் வருகை

பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழகம் வருகை

Sinekadhara

வரும் 30-ஆம் தேதி பரப்புரைக்காக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.

பிரதமருடன் இணைந்து பல பாஜக தலைவர்களும் தமிழகம் வரவுள்ளனர். குறிப்பாக இன்று தமிழகத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட அமைச்சர் நிதின் கட்கரி தமிழகம் வருகிறார். அவரைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன், ஜே.பி நட்டா, ஸ்ருதி இரானி, யோகி ஆதித்யநாத், ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா என அடுத்தடுத்து தமிழகத்துக்கு வருகை தரவுள்ளனர்.

தேர்தல் பரப்புரை 4ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளதால், வருகிற 26ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 3ஆம் தேதிவரை ஒவ்வொருவராக தமிழகம் வரவுள்ளனர். பிரதமர் மோடி 30ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிற தாராபுரம் தொகுதியில் அவருக்காக மோடி பரப்புரையில் ஈடுபடுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மீண்டும் 2ஆம் தேதி அவர் தமிழகம் வருவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதற்கான திட்டமிடலை மாநில பாஜக தலைமை செய்துவருகிறது.