டிரெண்டிங்

மின்கம்பியில் சிக்கித்தவித்த புறா... போராடி மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு

மின்கம்பியில் சிக்கித்தவித்த புறா... போராடி மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு

kaleelrahman

மின்சார வயரில் சிக்கித்தவித்த புறாவை, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


மதுரை டவுன்ஹால் ரோடு, கூடல் அழகர் பெருமாள் கோவில் அருகே நேற்று மாலை பறந்து சென்ற புறாவின் கால் பட்டம் விட்ட நூலில் மாட்டிக்கொண்டு, எதிர்பாராத விதமாக அங்கு உள்ள மின்சார வயரில் சிக்கிக்கொண்டது.


அதனைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் துரிதமாக செயல்பட்டு மின் இணைப்பை துண்டிக்க வைத்து, சுமார் ஒருமணி நேரத்திற்கு மேல் போராடி மின்வயரில் சிக்கித்தவித்த புறாவை மீட்டனர், ஆட்டோ ஓட்டுனர்கள் துரிதமாக செயல்பட்டு மின்இணைப்பை துண்டித்து புறாவை மீட்ட சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.