“நான் இதய நோயாளி. என் கணவர், சமையல் வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்குச் சென்று வர இருசக்கர வாகன வசதி தேவை” – அமிர்தா, சென்னை
“எனக்கு கணவர் இல்லை. நான் மாற்றுத்திறனாளி. எங்கள் வீட்டில், 4 பேர் உள்ளனர். மூளை வளர்ச்சி இல்லாத தங்கையும் இருக்கிறார். எங்களுக்கு, அத்தியாவசியப் பொருட்கள் தேவை” – மோகனா, சென்னை
“எனக்கு தந்தை இல்லை. வயதான தாய் மட்டுமே உள்ளார். தற்போது வேலையில்லாததால், வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை, உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். உதவி கிடைத்தால், நன்றாக இருக்கும்” – லட்சுமணன், சென்னை
“நான் எலக்ட்ரீசியன். தற்போது வேலையில்லை. 2 வாரங்களுக்கு முன் ரேஷன் கார்டுக்கு எழுதி கொடுத்திருந்தேன். அதுவும் இன்னும் வரவில்லை. ஏதாவது ஒரு வேலை வேண்டும். என்னுடைய படிப்புத் தகுதி BE(MBA). ஏதேனும் வேலை கிடைத்தால், போதும்” – சீனிவாசன், சென்னை
“என்னுடைய மருமகன் இப்போது உயிருடன் இல்லை. மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர். என் பேத்தி, இந்த ஆண்டோடு 12th முடிக்கிறார். மேற்கொண்டு அவள் படிப்பைத் தொடர உதவி தேவை” – கண்ணாத்தாள், சென்னை
‘என் தந்தை கொரோனாவால் மரணத்துவிட்டார். எனக்கும் என் தாய்க்கும் உணவு மற்றும் மளிகைப்பொருள்கள் தேவைப்படுகிறது” – முகம்மது, சென்னை
- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.
உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'