டிரெண்டிங்

பிரச்சாரத்திற்கு நடுவே பவன் கல்யாண் உடல்நிலை பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி

பிரச்சாரத்திற்கு நடுவே பவன் கல்யாண் உடல்நிலை பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி

rajakannan

தேர்தலுக்காக தொடர்பு பரப்புரை மேற்கொண்டு வந்ததால், பவன் கல்யாண் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றது. தேர்தலையொட்டி பவன் கல்யாண் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

விசாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, குண்டூரில் பரப்புரை மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டரில் விஜயவாடா சென்றார். அப்போது, அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துமனைக்கு சென்றார். பவன் கல்யாணுக்கு நீர் சத்து குறைந்துள்ளதாக கூறிய மருத்துவர்கள், ஓய்வு எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர். அதனால், தெனாலி, சட்டெனபள்ளி பகுதியில் சாலை மார்க்கமாக மேற்கொள்ளவிருந்த பரப்புரை திட்டம் ரத்து செய்யப்பட்டது.