டிரெண்டிங்

தாகத்திற்கு தென்னை மரத்திலிருக்கும் இளநீர் குடிக்கும் கிளி - க்யூட்டான வைரல் வீடியோ

Sinekadhara

இன்று இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் ஒரு அழகிய வீடியோ க்ளிப்பை பகிர்ந்துகொண்டார். அதில் ஒரு கிளி தென்னை மரத்தில் அமர்ந்துகொண்டு, சிறிய தேங்காயை கொடியுடன் பறித்து, அதிலிருந்து தன்ணீரைக் குடித்து தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும் வீடியோ அது.

’யாருக்குத்தான் இளநீர் குடிக்கப் பிடிக்காது?’ என்ற தலைப்பில் நந்தா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தேங்காய் தண்ணீரில் இருக்கும் நன்மைகளையும் விளக்கியுள்ளார். இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவுக்குப் பிறகு வயிற்று கஷ்டத்தைக் குறைக்கிறது. தினமும் இளநீர் குடித்துவந்தால் உடலில் எலக்ட்ரோலைட்டை சமநிலையில் வைக்க உதவுகிறது. இதனால் உடலின் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்று எழுதியுள்ளார்.

இந்த வீடியோவை பலரும் ரசித்து ’அவை அழகாக இருப்பதில் ஆச்சர்யமில்லை’, ‘அவைகளின் மூக்கு எவ்வளவு வலியாக இருக்கிறது!’ என்பது போன்ற பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.