கந்துவட்டி கொடுமையால் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து உயிரிழந்தவர் முன்னதாக அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால்தான் இக்கொடூரமான முடிவுக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடுப்புச் சட்டம் ஏட்டளவிலேயே இருப்பதாக கூறியுள்ள பாரிவேந்தர், கந்துவட்டி கொடுமையால் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.