அதிமுக அம்மா அணியில் தினகரன் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பெரம்பலூர் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச இருக்கிறார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூருக்கு சென்றுள்ளார். இதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற அவருக்கு வாத்திய மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் புறப்பட்டுச்சென்றார். பெரம்பலூர் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.