நல்லவர்கள் அமைத்த கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்காக பாரிவேந்தர் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதனொரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளரை ஆதரித்து பாரிவேந்தர் வாக்குசேகரித்தார்.
அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி உண்மைகளை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்தார். ஆனால், ஊழல் கரை படியாத தங்கள் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறிய பாரிவேந்தர், இளைஞர்கள் ஆர்வமுடன் அரசியலுக்கு வரவேண்டும் எனக் குறிப்பிட்டார்.