டிரெண்டிங்

"புதிய அரசு அமைய வாக்களித்திருக்கிறேன்" - ப.சிதம்பரம்

"புதிய அரசு அமைய வாக்களித்திருக்கிறேன்" - ப.சிதம்பரம்

webteam

சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை பதிவு செய்தார்.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மூத்த வாக்காளர்களும் காலையிலேயே வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை சிவகங்கை மாவட்டம் கண்டனூர் பெத்தாள் ஆச்சிப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த நாள் நல்ல நாள். இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நாம் விரும்புகிற மாற்றம் ஏற்பட்டு,புதிய அரசுகள் அமைவதற்கு நான் வாக்களித்திருக்கிறேன். அதுபோல தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சுயமரியாதை, பகுத்தறிவு, ஜனநாயகம், சுதந்திரம், எம்மதமும் சம்மதம், சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம், அன்பு இவற்றை காப்பாற்றுவதற்காக இவை வெல்லுவதற்காக வாக்களிக்க வெண்டும் என்று தமிழக மக்களை கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.