டிரெண்டிங்

தொலைபேசிகளை பாஜக ஒட்டுக்கேட்பதா! நாட்டுக்கே கேடு: ஆசாத் ஆவேசம்

தொலைபேசிகளை பாஜக ஒட்டுக்கேட்பதா! நாட்டுக்கே கேடு: ஆசாத் ஆவேசம்

webteam

எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, நேற்று முதல் முறையாக மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது வேலை இல்லாத இளைஞர்கள் பக்கோடா விற்று கூட பிழைக்கலாம் என்று அவர் கூறினார். இந்த பக்கோடா விவகாரம் பல விமர்சனங்களை பெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பக்கோடா என்ற சொல்லை குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றன. 

பின்னர் பேசிய குலாம் நபி ஆசாத், நாடாளுமன்றத்தில் முதல் உரையாற்றிய அமித்ஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பின்னர் பாஜகவை விமர்சிக்க தொடங்கிய அவர், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலாய்வு அமைப்பு, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை பாஜக சுய லாபத்திற்காக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல என்றும் கூறினார். மேலும் பாஜக அரசு செயல் மாற்றம் எதுவும் செய்யவில்லை, காங்கிரஸ் திட்டங்களை பெயர் மாற்றம் தான் செய்துள்ளது என்று விமர்சித்தார்.