டிரெண்டிங்

பாட்டிக்கு செல்ஃபி எடுக்க கற்றுத்தந்த அமைச்சர்!

பாட்டிக்கு செல்ஃபி எடுக்க கற்றுத்தந்த அமைச்சர்!

webteam

கரூரில் அதிமுக நிகழ்ச்சியில் மூதாட்டியுடன் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செல்ஃபி எடுத்தார்.

கரூர் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கருடன் தொண்டர்கள் அனைவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அவ்வாறு மூதாட்டி ஒருவரும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

மூதாட்டிக்கு செல்ஃபி எப்படி எடுப்பது என விஜயபாஸ்கர் கற்றுக்கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர். அத்துடன் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.