டிரெண்டிங்

தாளம் தப்பாமல் ஆட்டம்போட்ட அலங்கார குதிரை... தேர்தல் களத்தில் சுவாரஸ்யம்!

kaleelrahman

தேர்தல் களத்தில் வாத்திய இசைக்கு ஏற்ப ஆட்டம் போட்ட அலங்கார குதிரை காண்போரை பரவசமடையச் செய்தது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் சூடு பிடித்துள்ள அரசியல் களத்தில் நகைச்சுவைகளுக்கும் பஞ்மில்லை. முதியவர்கள் குத்தாட்டம் போடுவது, தலைவர்களை வரவேற்க பெண்கள் நடனமாடுவது, வேட்பாளர்களே வாக்காளர்களுடன் இணைந்து ஆடிப்பாடி வாக்கு சேகரிப்பது என பிரச்சார களம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் இராமநாதபுரம் வாலாந்தரவை கிராமத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் இராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு வேட்பாளர் வருவதற்கு முன் நாதஸ்வரம் மேளம் உள்ளிட்ட வாத்தியங்கள் இசைக்கப்பட்ட நிலையில், வரவேற்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குதிரைகள் வாத்திய இசைக்கு ஏற்ப கால்களை தூக்கி ஆட்டம் போட்டது.

தேர்தல் களத்தில் கொட்டும் வாத்தியங்களுக்கு மனிதர்கள் குத்தாட்டம் போடும் நிலையில், குதிரையும் ஆட்டம் போட்ட காட்சிகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.