அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக தலைமைச் செயலகத்தில் இரு அணிகளும் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘அதிமுக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீசெல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். நான் இணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவேன். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி துணை ஒருங்கிணைப்பாராக நியமிக்கப்பட்டுள்ளார். 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்படும். இன்னும் நூறாண்டு காலம் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் நீடிக்கும் என ஜெயலலிதா சட்டப்பேரவையில் சூளுரைத்தார். அந்த லட்சிய வார்த்தைகளை நிறைவேற்றுவோம். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு எதிரிகளை வீழ்த்துவோம்’ எனத் தெரிவித்தார்.