டிரெண்டிங்

இளையராஜா உள்ளிட்டோருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

இளையராஜா உள்ளிட்டோருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

Rasus

பத்ம விபூஷண் விருதுபெறும் இளையராஜா உள்ளிட்டோருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட  துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின்  சார்பில் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. இந்தாண்டும் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் பத்ம விருது பெறுபவர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “பத்மவிபூஷண் விருதுபெறும் இளையராஜா, பத்மபூஷண் விருதுபெறும் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமசந்திரன் நாகசுவாமி ஆகியோருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், “ பத்மஸ்ரீ விருதுபெறும் யோகா ஆசிரியை  வி.நானாம்மாள், நாட்டுப்புறப் பாடகர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கிண்டி பாம்பு பண்ணையை நிறுவிய  ராமுலஸ் விட்டேகர், பொறியாளர் ராஜகோபாலன் வாசுதேவன் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.