டிரெண்டிங்

டெல்லி சென்றார் ஓபிஎஸ்

டெல்லி சென்றார் ஓபிஎஸ்

Rasus

பாரதிய ஜனதா கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

புறப்பட்டுச் செல்லும் முன் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை பாரதிய ஜனதா குடியரசுத் தலைவர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது உடன் இருக்குமாறு அழைப்பு வந்ததால் டெல்லிக்கு செல்வதாக கூறினார்.

ராம்நாத் கோவிந்த்துக்கு நேரில் ஆதரவு அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.