டிரெண்டிங்

தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஓபிஎஸ் தரப்பு சந்திப்பு

தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஓபிஎஸ் தரப்பு சந்திப்பு

webteam

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்தித்தனர்.

ஓ.பன்னீர் செல்வத்துடன், அந்த அணியைச் சேர்ந்த மைத்ரேயன், கே.பி.முனுசாமி ஆகியோரும் சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் நாங்கள் சசிகலாவையும், தினகரனையும் நியமித்தது செல்லாது என்று கொடுத்திருக்கின்ற மனுவுக்கு வலுசேர்க்கும் வகையில் அந்த தீர்மானத்தின் சில குறிப்புகளை எடுத்து இங்கே பிரமாண வாக்குமூலமாக சில ஆவணங்களை நாங்கள் தாக்கல் செய்திருக்கிறோம்” என்று கூறினார்.