டிரெண்டிங்

எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதியை முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதியை முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

webteam

புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதியை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். 

தமிழக முதல்வருக்கான ஆதரவை திரும்பப்பெற்றதைத் தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் புதுச்சேரி சின்னவீராம்பட்டினத்திலுள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் த‌லைமையில் திரண்ட ஆதரவாளர்கள் அந்த விடுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டிடிவி.தினகரனின் உருவபொம்மையை எரித்தும், தினகரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனையடுத்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதியைச் சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.