டிரெண்டிங்

மீண்டும் அதிருப்தி?: மதுரை முப்பெரும் விழாவில் பங்கேற்காத ஓபிஎஸ்

மீண்டும் அதிருப்தி?: மதுரை முப்பெரும் விழாவில் பங்கேற்காத ஓபிஎஸ்

Rasus

மதுரையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை இலை சின்னம் கிடைத்த வெற்றியை கொண்டாடும்பொருட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். கொடியேற்றும் விழாவில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இருப்பினும் இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைத்தபிறகு நடைபெற்ற முதலாவது நிகழ்ச்சியான இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என சமீபத்தில் நாடாளுமன்ர உறுப்பினர் மைத்ரேயன் முகநூலில் பதிவிட்டது
குறிப்பிடத்தக்கது.